.webp)
Colombo (News 1st) தேயிலைக்கான நான்கு வகை உரங்களை மீண்டும் சந்தையில் விநியோகிக்க Commercial உர நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேயிலை செய்கையில் ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டினை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக Commercial உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்தார்.
சந்தை விலையை விட குறைவான விலையில் உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
U709,U834,T200,T750 போன்ற உர வகைளே சந்தையில் விநியோகிக்கப்படவுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக மரக்கறிக்கான இரண்டு உர வகைகளையும் சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக Commercial உர நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில், முதல் கட்டத்தில் 6500 மெட்ரிக்தொன் உரம் விநியோகிக்கப்படவுள்ளதுடன், அதற்காக தற்போது 800
மெட்ரிக் தொன் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
U709,U834 ஆகிய 50 கிலோகிராம் உர வகைகள் சந்தையில் 23,000 ரூபா விற்கப்படுகின்ற நிலையில் , 10,000 ரூபாவிற்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக Commercial உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா சுட்டிக்காட்டினார்.