.webp)
Colombo (News 1st) எதிர்வரும் வாரத்திற்குள் வௌிநாட்டில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையை 40 அல்லது 42 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக முட்டை இறக்குமதிக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டின் தேவைக்கேற்ப 20 வீதமானஅளவு முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணம் இறக்குமதி நிறுவனங்களிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.