.webp)
Colombo (News 1st) இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் அதி உயர் கௌரவ விருதான பிரவாசி பாரதிய சம்மான் (Pravasi Bharatiya Samman)விருதிற்கு குமார் நடேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய புலம்பெயர் சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகின்றது.
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான குமார் நடேசனை இந்த ஆண்டிற்கான 'பிரவாசி பாரதிய சம்மான்' விருதிற்காக இந்திய அரசாங்கம் தெரிவு செய்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இந்தூரில் நடைபெறும் 17ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் போது இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்கி வைக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
குமார் நடேசன் இந்தியாவின் இந்த உயரிய விருதினைப் பெறும் இரண்டாவது இலங்கை பிரஜையாவார் என உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.