.webp)
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு நாளை (04) மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளூடாக வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
அறிவிப்பு வௌயிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கலுக்கு மூன்றரை நாட்கள் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த அறிவிப்பில் வேட்புமனு ஏற்கும் திகதி, இடம், பிணை தொடர்பான விபரம், வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பெண் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.
341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் அறிவிப்பு வௌியிடப்படவுள்ளது.