களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கைது

களனி பல்கலைக்கழக அனைத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் மாணவ செயற்பாட்டாளர் கைது

by Chandrasekaram Chandravadani 02-01-2023 | 5:16 PM

Colombo (News 1st) களனி பல்கலைக்கழக அனைத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் மாணவ செயற்பாட்டாளர் ஒருவரும் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் கல்வி அமைச்சிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்களிருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.