.webp)
Colombo (News 1st) இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் உத்தரகாண்டில் இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்க்கியில் ரிஷப் பண்டின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இதனையடுத்து கார் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதன்போது, ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.