தொழிலுக்கு சென்ற 2 மீனவர்கள் காணாமல் போயினர்

சிலாவத்துறையில் தொழிலுக்கு சென்ற 2 மீனவர்கள் காணாமல் போயினர்

by Chandrasekaram Chandravadani 27-12-2022 | 10:52 AM

Colombo (News 1st) மன்னார் - சிலாவத்துறை பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

கடந்த 24ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற, சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதான இரண்டு மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் திணைக்களம் கூறியுள்ளது.