பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

by Staff Writer 26-12-2022 | 2:54 PM

Colombo (News 1st) வத்தளை - ஹெந்தல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்றிருந்த 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த 02 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றிரவு(25) கூச்சலிட்டவாறு வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனை நடத்த முயன்றுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்த நிலையில், அவர்களை கைது செய்ய முற்பட்ட பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்றிருந்த 03 இளைஞர்களும் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாபோல பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.