வயோதிப கைதிகள் தொடர்பாக நடவடிக்கை

வயோதிபர்கள், நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பில் நடவடிக்கை

by Rajalingam Thrisanno 24-12-2022 | 2:48 PM

சிறைச்சாலைகளில் வயோதிபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பில் இலகுவான கொள்கையை கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவிக்கிறார். 

அத்தகைய கைதிகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பல உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். 

இந்த குழுக்களின் பரிந்துரைக்கு அமைவாக சம்பந்தப்பட்ட கைதிகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நீதியமைச்சர் குறிப்பிட்டார்.