பொது பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

நிலக்கரி கிடைக்காவிட்டால் அடுத்த ஆண்டில் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் - PUCSL எச்சரிக்கை

by Chandrasekaram Chandravadani 21-12-2022 | 11:27 AM

Colombo (News 1st) அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், அடுத்த ஆண்டில் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் சில மாதங்களுக்கு தேவையான நிலக்கரி தொகையை உடனடியாக நாட்டிற்கு கொண்டுவ​ர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.