.webp)
Colombo (News 1st) நெய்யுடன் பல வகையான எண்ணெய்கள் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது வௌிக்கொணரப்பட்டுள்ளது.
நெய்யில் மரக்கறி எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பரிசோதனைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மலையகப் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் இவ்வாறான விற்பனைகள் இடம்பெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், துறைமுகத்திலிருந்து விநியோகிக்கப்படும் நெய்யை பரிசோதனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.