வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா இணக்கம்

கடன் நெருக்கடி: வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா இணக்கம்

by Staff Writer 17-12-2022 | 7:36 PM

Colombo (News 1st) உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்தான வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) இதனை தெரிவித்துள்ளார்.

சீனா இணக்கம் தெரிவித்துள்ள இந்த வட்டமேசை பேச்சுவார்த்தையில் தனியார் துறையின் கடன் வழங்குநர்களும் பங்கேற்க உள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கருத்துகளை பரிமாறிக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.