.webp)
Colombo (News 1st) இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 450g நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோதுமை மா விலை குறைவடைந்து செல்வதால், பாணின் விலையை குறைக்க தீர்மானித்ததாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்தார்.
இதனிடையே, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.