.webp)
Colombo (News 1st) அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அபிவிருத்தி பணிகளை இலகுபடுத்துவதற்காக இந்த இரு நகர சபைகளும் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள், மனித வளங்களை பயன்படுத்தி மேலதிக நிதியை செலவிடாமல் ஒரு சில மாவட்டங்களின் நகரங்களை மாநகரங்களாக தரமுயர்த்தும் நோக்குடன் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.