நிர்மாண கைத்தொழில்: 1000 முறைப்பாடுகள்

நிர்மாண கைத்தொழில் முறைகேடுகள் தொடர்பில் 1,000 முறைப்பாடுகள் - நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை

by Staff Writer 11-12-2022 | 2:50 PM

Colombo (News 1st) நிர்மாண கைத்தொழிலில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் கடந்த ஒரு வருடத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் நிர்மாணத்துறை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக சபையின் பணிப்பாளர் நாயகம், பொறியியலாளர் சஞ்ஜீவ ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை எழுத்துமூலம் தமது அதிகார சபைக்கு சமர்ப்பிக்க முடியும் என நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.