.webp)
Colombo (News 1st) நாளைய தினம்(12) பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இன்று(11) தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டார்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு கடந்த வௌ்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டது.
நாட்டின் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.