.webp)
Colombo (News 1st) வௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்த இருவர் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 வயதான இளைஞரும் 45 வயதான பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 59 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு 06 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகளுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நேற்றைய தினம் (9) இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் நேற்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.