.webp)
Colombo (News 1st) அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தமது கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிணங்க, இந்த விடயத்திற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் நாட்களில் வௌியிட எதிர்பார்ப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
தற்போது சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
அரிசி வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாலேயே, உள்நாட்டு அரிசிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என கடந்த காலங்களில் அரிசி ஆலை உரிமையாளர்களும் தெரிவித்திருந்தனர்.