.webp)
Colombo (News 1st) 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இருவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் C.V.விக்னேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் M.வேலுக்குமார் ஆகியோரே வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.