.webp)
Colombo (News 1st) விருப்பம் இல்லாவிட்டாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுகின்றமை தொடர்பில் இன்று கடும் விவாதம் இடம்பெற்றது.
தற்போதைய சூழலில் மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் யோசனை இடைநிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கோரிக்கை விடுத்தார்.
எனினும், இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சபை அமர்வின் போது குறிப்பிட்டார்.
இதன்போது, உரையாற்றிய ஜனாதிபதி விருப்பம் இல்லாவிட்டாலும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.