.webp)
India: இலங்கைக்கு உதவும் விடயத்தில் இன பாகுபாடு காட்டப்படவில்லை என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மாநிலங்கள் அவையில் இந்தியாவின் வௌியுறவுத்துறை கொள்கை தொடர்பாக அவர் நேற்று (07) பின்வருமாறு விளக்கமளித்திருந்தார்.
இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுப்போம். முழு இலங்கைக்கும் எமது ஆதரவை வழங்க வேண்டும் என நான் கௌரவ உறுப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றேன். அதில் தமிழ், சிங்கள சமூகம் மற்றும் ஏனைய சமூகங்களுக்கும் ஆதரவை வழங்க வேண்டும். நாங்கள் இன பாகுபாட்டுடன் இந்த முன்னெடுப்பை மேற்கொள்ள முடியாது . இவ்வாறான மோசமான பொருளாதார நெருக்கடியில், அண்டை நாடு என்ற வகையில், நாங்கள் எமது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். அதிலிருந்து நாங்கள் விலகி செயற்பட முடியாது
இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாகவும் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இதன்போது கருத்து தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம் (....) இலங்கையின் விடயதானங்களில் சில மாற்றங்களை எற்படுத்தியுள்ளது. மாகாண சபைகள் உள்ளிட்ட விடயங்களில் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது. எமது பார்வையில் நாங்கள் தொடர்ச்சியாக அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையை பின்பற்றுகின்றோம்.