.webp)
India: டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று பா.ஜ.க-விடம் இருந்து மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உலகின் மிகப்பெரிய கட்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
15 ஆண்டுகளுக்கு பிறகு தில்லி மாநகராட்சியை ஆம் ஆத்மியிடம் பாஜக இழந்துள்ளது.
டெல்லி மாநகராட்சியின் 250 வாா்ட்களுக்கு கடந்த 4-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குகளை எண்ணும் நடவடிக்கை 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.