டிசம்பர் 15 வரை மின்வெட்டு தொடரும்

டிசம்பர் 15 வரை மின்வெட்டு தொடரும்; சுற்றுலா வலயங்களில் இரவு வேளையில் மின்வெட்டு இல்லை

by Staff Writer 30-11-2022 | 6:37 PM

Colombo (News 1st) தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களில் டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து இரவு வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாதென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அவர் கூறினார்.

டிசம்பர் 15 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமெனவும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மின்வெட்டுக்கான அனுமதி இன்று (நவம்பர்  30 ஆம் திகதி) வரை மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறினார்.

அதற்கு பின்னரான காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதனிடையே, மின்சார சபையின் நட்டத்தை மீள சரிசெய்ய மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமென மின்சார சபை பிரதிநிதிகள் தேசிய சபை உப குழுவிற்கு அறிவித்துள்ளனர்.