.webp)
Colombo (News 1st) கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத 7 சந்தேகநபர்களை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை, சொத்துகளை சேதப்படுத்தியமை மற்றும் சொத்துகளை கொள்ளையிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 27 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கினை அடுத்த வருடம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.