ஓமானுக்கான ஆட்கடத்தலுடன் தொடர்புடைய பெண் கைது

ஓமானுக்கான ஆட்கடத்தலுடன் தொடர்புடைய பெண் கைது

by Staff Writer 21-11-2022 | 2:25 PM

Colombo (News 1st) ஓமானுக்கான ஆட்கடத்தலுடன் தொடர்புடைய பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று(21) காலை குறித்த பெண் சரணடைந்த போது கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கடந்த சில வாரங்களாக குறித்த சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அவரால் வழங்கப்பட்டிருந்த 04 முகவரிகளிலும் அவர் வசிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானுக்கான ஆட்கடத்தல் தொடர்பில் இதுவரை 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.