ஓமானில் தங்கியுள்ள பெண்கள் தொடர்பான அறிவித்தல்

ஓமானில் சுற்றுலா விசா நிறைவடைந்த இலங்கை பெண்களிடம் அறவிடும் அபராதத்தை நீக்க கலந்துரையாடல்

by Staff Writer 21-11-2022 | 2:35 PM

Colombo (News 1st) சுற்றுலா விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததன் பின்னரும் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பெண்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை நீக்குவதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு தொழில்வாய்ப்பு நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓமானுக்கான இலங்கை தூதரகம் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமான டிக்கெட்கள் தொடர்பில் சிக்கல் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.