2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் FTA அமுலாகும்

2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அமுலாகும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 19-11-2022 | 4:41 PM

Colombo (News 1st) சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Singapore FTA ) 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட தொடர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

''தடைகளை சமாளித்தல் மற்றும் இலக்குகளை அடைதல்" என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.