கிராண்ட்பாஸில் துப்பாக்கிச்சூடு

கிராண்ட்பாஸில் துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் காயம்

by Bella Dalima 19-11-2022 | 3:40 PM

Colombo (News 1st) கிராண்ட்பாஸ் - நவகம்புர பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

47 வயதான ''மன்ன கண்ணா'' என அழைக்கப்படும் மாரிமுத்து கணேசன் என்பவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நவகம்புர வீட்டுத் திட்டத்தின் குறுக்கு வீதியிலேயே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கஞ்சிப்பானை இம்ரானின் தந்தையை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சம்பவத்தில், விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சந்தேகநபரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.