ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட செஹான் பசிந்துவிற்கு பிணை

by Bella Dalima 19-11-2022 | 8:05 PM

Colombo (News 1st) மாணவ செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட செஹான் பசிந்து இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

புதுக்கடை நீதிமன்ற இலக்கம் 3 நீதவான் இன்று பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அவரிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக செஹான் பசிந்து இன்று காலை தேசிய வைத்தியசாலையில் சிகிச்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது பொலிஸாரால் அவர் தாக்குதலுக்கு உள்ளானதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் பதில் ஏற்பாட்டாளர் டெரன்ஸ் ரொட்ரிகோ தெரிவித்தார்.