ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்த பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள்

by Staff Writer 14-11-2022 | 5:31 PM

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த 04 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(14) ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்த நால்வரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில், அனுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜயரத்ன ஹேரத் மற்றும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர்.