.webp)
Colombo (News 1st) 2022 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
பாகிஸ்தானுக்கு எதிராக இன்று(13) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 05 விக்கெட்களால் வெற்றி கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 05 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை எட்டியது.
ஏற்கனவே போல் கொலிங்வூட் தலைமையில் 2010ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணி முதற்தடவையாக இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.