பிரபல எழுத்தாளர் ஜெ.லெனின் மதிவானம் காலமானார்

பிரபல எழுத்தாளர் ஜெ.லெனின் மதிவானம் காலமானார்

by Staff Writer 13-11-2022 | 10:23 PM

Colombo(News 1st) கல்வி வௌியீட்டு திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளரும் பிரபல எழுத்தாளருமான ஜெ.லெனின் மதிவானம் தமது 51ஆவது வயதில் இன்று(13) காலமானார்.

மலையக இலக்கியத் துறையில் தமக்கென தனியிடம் கொண்ட எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் செயற்பட்ட அன்னார், சுகயீனம் காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

ஹட்டன் - காசல்ரீயை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் லெனின் மதிவானம், ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் கடமையாற்றியிருந்தார்.