மசகு எண்ணெய் இறக்கும் பணி ஆரம்பம்

நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து மசகு எண்ணெய் இறக்கும் பணி ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன

by Staff Writer 13-11-2022 | 3:42 PM

Colombo (News 1st) நாட்டை வந்தடைந்துள்ள மசகு எண்ணெய் கப்பலிலிருந்து எண்ணெய் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில் 99,978 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனைத்தவிர நாட்டை வந்தடைந்த மற்றுமொரு கப்பலிலிருந்து 95 ரக பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று(13) ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

95 ரக பெற்றோலை ஏற்றிய கப்பல், ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

குறித்த கப்பலில் 19,505 மெட்ரிக் தொன் பெட்ரோல் கொண்டு வரப்பட்டது.