சிரமதான பணியின் போது டொலமைட் வெடித்ததில் இருவர் காயம்

by Staff Writer 13-11-2022 | 6:32 PM

Colombo (News 1st) யாழ். கோப்பாய் - கைதடி வீதியில் இடம்பெற்ற சிரமதானப் பணியின் போது டொலமைட் வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மர நடுகைக்காக மேற்கொள்ளப்பட்ட சிரமதானத்தின் போதே, டொலமைட் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மணல் சிதறியதில், சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் சிறு காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.​

தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களே இன்று(13) காலை சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.