போராட்ட தினத்தை நினைவுகூர காலி முகத்திடலுக்கு சென்ற செயற்பாட்டாளர்களுக்கு பொலிஸார் இடையூறு

by Bella Dalima 09-11-2022 | 7:58 PM

Colombo (News 1st) 9 ஆம் திகதியை போராட்ட தினமாக நினைவுகூர்வதற்கு இன்று பிற்பகல் காலி முகத்திடலுக்கு சென்ற செயற்பாட்டாளர்கள் சிலருக்கு பொலிஸார் இடையூறு விளைவித்தனர்.

எனினும், பொலிஸாரின் தடையையும் தாண்டி அவர்கள் தீபங்கள் ஏந்தி போராட்டத்தை நினைவுகூர்ந்தனர்.

காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தின் வெற்றியையும் அதற்காக அர்ப்பணித்தவர்களையும் நினைவுகூர்ந்து நினைவு தின நிகழ்வொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செயற்பாட்டாளர்கள் சிலர் இன்று பிற்பகல் காலி முகத்திடலில் ஒன்றுகூடிய போது, அங்கு வந்த பொலிஸார் ஒரு பகுதியில் மாத்திரம் இதனை மேற்கொள்ளுமாறு பணித்தனர். இதனால், அமைதியின்மை ஏற்பட்டது. 

பின்னர் தேரர்கள் உள்ளிட்ட தரப்பினர் காலி முகத்திடலுக்கு முன்பாகவுள்ள ஒரு இடத்தில் நினைவுகூரல் நிகழ்வை முன்னெடுத்தனர். சமய வழிபாடுகளும் இதன்போது இடம்பெற்றன.

பின்னர் பொலிஸார் மீண்டும் தலையிட்டு அவர்களை அங்கிருந்து வௌியேற்றினர்.

அதனையடுத்து, போராட்ட செயற்பாட்டாளர்கள் காலி முகத்திடலில் ஒரு பகுதிக்கு சென்று விளக்குகளை ஏற்றி போராட்ட செயற்பாட்டாளர்களை நினைவுகூர்ந்தனர்.