உக்ரைனுக்கு மேலும் 400 Mn டொலர்கள் ஆயுத உதவி

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டொலர்கள் ஆயுத உதவி: அமெரிக்கா அறிவிப்பு

by Bella Dalima 05-11-2022 | 7:30 PM

உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 8 மாதங்களைக் கடந்துள்ளது. 

போரினால் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. 
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. 

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.