வசந்த முதலிகேவிற்கு மருத்துவ பரிசோதனை

வசந்த முதலிகேவிற்கு மருத்துவ பரிசோதனை

by Bella Dalima 02-11-2022 | 5:21 PM

Colombo (News 1st) 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, பரிசோதனை ஒன்றுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார்.

பரிசோதனை மற்றும் சிகிச்சையின் பின்னர் அவர் மீண்டும் தடுப்புக்காவலுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வசந்த முதலிகே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.