எதிர்ப்புப் பேரணிக்கு பொலிஸார் இடையூறு

''அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புப் பேரணி'' மருதானையில் ஆரம்பம்; பொலிஸார் இடையூறு

by Bella Dalima 02-11-2022 | 4:35 PM

Colombo (News 1st) ''அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான  எதிர்ப்புப் பேரணி'' மருதானையில் ஆரம்பமாகியுள்ளது. 

இந்த பேரணி கோட்டை ரயில் நிலையம் நோக்கிச் செல்வதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில் பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ,முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 43 ஆம் படையணி, சுதந்திர மக்கள் சபை உள்ளிட்ட சுமார் 20 அரசியல் கட்சிகளும் சுமார் 150 தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின்  இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.