.webp)
Colombo (News 1st) நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டார்.
கப்பலில் 3700 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவற்றை இறக்கும் பணிகள் நாளை (30) ஆரம்பிக்கப்படவுள்ளன.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்துள்ளதாகவும், இதன் பிரதிபலனை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.