.webp)
Colombo (News 1st) நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் யூரியா மூடையை 10,000 ரூபாவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு 60,000 ஹெக்டேருக்கு அவசியமான 12,000 மெட்ரிக் தொன் யூரியா வழங்கப்படவுள்ளதுடன், இதற்காக வழங்கப்படும் 50 கிலோ யூரியாவின் விலை 15,000 ரூபா என அவர் கூறினார்.