.webp)
Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
அதற்கமைய, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் தொடர்ந்து பெய்த மழை காரணமாக கைவிடப்பட்டது.
அதற்கமைய, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குழு A-க்கான புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்திற்கும் அவுஸ்திரேலிய அணி நான்காம் இடத்திற்கும் முன்னேறியுள்ளன.
இலங்கை அணி ஐந்தாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.