.webp)
Colombo (News 1st) தமிழ் பேசும் மக்களின் சக்தியாக திகழும் சக்தி தொலைக்காட்சியின் 24 ஆவது அகவைப் பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் இசை நிகழ்ச்சியொன்று நாளை (29) நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு மாபெரும் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய பின்னணிப் பாடர்கர்களான சத்தியபிரகாஷ், ஹரிப்பிரியாவுடன் நம்நாட்டுக் கலைஞர்கள் பலரும் மீன்பாடும் தேன் நாடாம் மட்டு மாநகரில் நாளை இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.