.webp)
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் சாட்சி ஆதாரங்களை நவம்பர் 4 ஆம் திகதி தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் ஹேமந்த புஷ்பகுமார இன்று உத்தரவிட்டார்.
சட்டத்தரணி நுவன் போப்பகே முன்வைத்த நகர்த்தல் பத்திரம் தொடர்பில் ஆராய்ந்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தங்காலை மத்திய பயங்கரவாத விசாரணை முகாமின் பொறுப்பதிகாரி பொலிஸ் இக்ஸ்பெக்டர் அனுர ஷாந்த இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், இரண்டு கைதிகளும் தற்போது கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.