.webp)
Colombo (News 1st) சர்வதேச எரிசக்தி விநியோகஸ்தர்கள் இந்த வருட இறுதிக்குள் உள்ளூர் சந்தைகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய உற்பத்தி விசேட ஏற்பாடுகள் திருத்த சட்டம், ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய, சர்வதேச எரிசக்தி விநியோக நிறுவனங்களுக்கு நாட்டின் எரிபொருள் சந்தைக்குள் நுழையும் வாய்ப்பு கிட்டுமென்பது குறிப்பிடத்தக்கது.