முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா இரு மடங்காக அதிகரிப்பு

by Staff Writer 24-10-2022 | 7:04 PM

Colombo (News 1st) முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை இரட்டிப்பாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முச்சக்கர வண்டி சாரதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதன் முதற்கட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கிணங்க, மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

புதிய கோட்டாவின் கீழ் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.