40% வீதி விபத்துகள் மோட்டார் சைக்கிள் விபத்துகள்

மோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

by Staff Writer 23-10-2022 | 3:00 PM

Colombo (News 1st) தற்போதைய வாகன விபத்துகளில் 40 வீதமானவை மோட்டார் சைக்கிள் விபத்துகளாக பதிவாகியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் அன்டன் டி மெல் தெரிவித்துள்ளார்.

மொறட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.