சவுதியில் சித்திரவதைக்குள்ளாகும் 5 இலங்கை பெண்கள்

சவுதியில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்படும் இலங்கை பணிப்பெண்கள் ஐவர் தொடர்பில் தகவல்

by Bella Dalima 22-10-2022 | 3:54 PM

Colombo (News 1st) சவுதி அரேபியாவின் சகாக் நகரில் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் ஐவர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு,  கட்டடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்டிற்கு தகவல் கிடைத்துள்ளது.

குருநாகலில் தனியார் முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காக சென்ற 5 பெண்கள் இவ்வாறு கட்டடமொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, நாடு திரும்பிய எஹெலியகொட பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஊடாகவே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

சவுதி அரேபியாவிலுள்ள தனியார் முகவர் நிலையம் அமைந்துள்ள கட்டடமொன்றில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும் அவர்களுக்கு உண்பதற்கு உணவு கிடைப்பதில்லை எனவும் நாட்டை வந்தடைந்த  நிர்மா தர்மசேன நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து ஆராய்வதாக சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.