நீக்கப்படவேண்டிய சொற்பதங்களை அறிவித்தது நீதிமன்றம்

புனர்வாழ்வு அதிகார சபை சட்டமூலத்திலிருந்து போராளிகள் எனும் சொற்பதம் நீக்கப்பட வேண்டும் - உயர் நீதிமன்றம்

by Staff Writer 20-10-2022 | 11:37 AM

Colombo (News 1st) போராளிகள், வன்முறைகளில் ஈடுபடுவோர் ஆகிய சொற்பதங்கள் புனர்வாழ்வு அதிகார சபை சட்டமூலத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது

உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(20) பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்விற்கு மாத்திரமே குறித்த சொற்பதத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.