.webp)
Indonesia: இந்தோனேஷியாவில் இவ்வருடத்தில் மாத்திரம் 99 சிறுவர்கள் உயிரிழந்ததையடுத்து, அங்கு அனைத்து Syrup மருந்துகளையும் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தோனேஷியா அனைத்து syrup வகை மருந்துகளின் விற்பனையை தற்காலிகமாக தடை செய்துள்ளதுடன், Diethylene Glycol மற்றும் Ethylene Glycol அடங்கிய, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உள்நாட்டு Paracetamol Syrup-களையும் உன்னிப்பாக அவதானிக்க தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நான்கு வகையான இருமல் திரவ மருந்தை (syrup) காம்பியாவில் உட்கொண்ட 66 சிறுவர்கள் உயிரிழந்தமையைத் தொடர்ந்து இந்தோனேஷியாவில் தடை அறிவிப்பு வௌியாகியுள்ளது.
எனினும், இந்தோனேஷியாவில் குழந்தைகள் உட்கொண்ட மருந்து எதுவென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
காம்பியாவில் குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமான 4 வகையான மருந்துகள் இந்தியாவின் ஹரியான மாநிலத்தை கேந்திரமாகக் கொண்ட மருந்து உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், காம்பியாவில் குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்து குறித்த மருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காம்பியாவில் குழந்தைகள் உயிரிழந்தமையைத் தொடர்ந்து இலங்கையில் குறித்த வகை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றதா என விசாரணை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.