தமிழக கடலோர பகுதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் சீன இராணுவ வீரர்கள் நடமாட்டம்; தமிழக கடலோர பகுதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

by Bella Dalima 19-10-2022 | 5:36 PM

Colombo (News 1st) தமிழக கடலோர பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

சீன இராணுவ வீரர்கள் நடமாட்டம்  இலங்கையில் அதிகமாகக்  காணப்படுவதால்,   பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில்,  தமிழக கடலோர பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடலோர பொலிஸார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் கடலில் பயணிக்கும் படகுகள் சோதனையிடப்படுவதுடன், கன்னியாகுமரியில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களிடமும்  வழக்கத்தை விட வித்தியாசமாக தென்படும் படகு, மற்றும் நபர்கள் குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கரையோர மாவட்டத்தில்  காணப்படும் 11 கடலோர சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

கன்னியாகுமரி தங்கும் விடுதிகளுக்கு வரும் வெளிநபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக The Hindu வௌியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.